Saturday, 1 October 2011

பள்ளி வரலாறு


சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டம் அது. மாதத்திற்கு ¼ அணா கொடுத்து மணலில் எழுதி கல்வி கற்றுவந்தனர் சிலர். இத்தகைய ஆர்வத்தினைக்கண்ட திரு.எம்.கே.கெம்பையகவுடர் (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்) அவர்களின் தந்தை திரு.கெம்பஜிகவுடர் அவர்களின் வழிகாட்டுதலால் திரு.ரங்கப்பகவுடர், திரு.திம்மையகவுடர், ஊர்கவுடர் திரு.திம்மப்பகவுடர் ஆகியோர்களின் பெருமுயற்சியால் 21.08.1930 ஆம் ஆண்டு திரு.ஆர்.வி.திம்மப்பகவுடர் அவர்களுடைய தோட்டத்தின் கீற்றுச்சாலையில் நலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல் ஆசிரியராக திரு.கோவனுார் பள்ளிகுண்ட ஐயர் அவர்கள் பணியாற்றியுள்ளார்.


படம் இணையத்திலிருந்து

அடுத்த சில ஆண்டுகளில் பொதுமக்களின் முயற்சியால் மண்சுவராலான கூரைப் பள்ளி ஒன்று சொந்தமாக உருவாக்கப்பட்டது. அன்றைய கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதியுடன் இந்த நலப்பள்ளியானது 30.01.1937 முதல் District Board Elementary school லாக தரமுயர்த்தப்பட்டது. அன்றைய அவிநாசி தாலுாக்காவிற்கு உட்பட்ட இராமம்பாளையம் பகுதியில் பள்ளிக்கூடம் என்ற அத்தியாயம் இவ்வாறாகத் தொடங்கியது. இங்கு கல்வியுடன்  சிலம்பாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் போன்ற Extra co-curricular activitiesகள் கற்றுத்தரப்பட்டுள்ளது.

நாளடைவில் இராமம்பாளையம் பகுதி மட்டுமல்லாமல் ஜடையம்பாளையம், தொட்டபாவி, தேரம்பாளையம், மாதனுார், பொன்முடி போன்ற பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது. இடப்பற்றாக்குறையால் தற்போது நூலகம் அமைந்துள்ள இடத்தில் ஊர் பொதுமக்களின் முயற்சியால் ஓட்டுக்கூரை வகுப்பறை ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு 1942 ம் ஆண்டு ஜில்லா போட்டு துணைத்தலைவர் கூகலுார் கே.கே.சுப்பண்ணகவுடர் மற்றும் எம்.கே. கெம்பையகவுடர் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் நுாற்றுக்கும் மேலான மாணாக்கர்கள் இங்கு கல்வி பயின்றுள்ளனர். ஆசிரியர்களின்  Dedication and Sacrifice ஆகியவற்றினால் மிகச்சிறப்பான பள்ளியாக இப்பள்ளி செயல்பட்டுள்ளது.

ஜடையம்பாளையம் (08.05.1949), தொட்டபாவி (31.12.1954) ஆகிய பகுதிகளில் புதிய பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதால் மாணாக்கர்களின் எண்ணிக்கை குறைந்தது.

1959 ஆம் ஆண்டு பகலுணவு மையம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 45 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்து வந்த வகுப்பறை கட்டடம் பழுதானதால் கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றித்தின் சார்பாக 1988 ஆம் ஆண்டில் புதிய இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

2 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகான வரலாறு ஃப்ராங்ளின்...! உங்கள் முயற்சிகள் வெற்றியாக வாழ்த்துகள்....

    லவ்டேல் மேடி,
    ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக...

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.