Thursday, 8 September 2011

எங்கள் பள்ளி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
பள்ளி பற்றிய தகவல்கள்:

 • அமைதியான கிராமச் சூழல்.
 • போதுமான கட்டட வசதி.
 • சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
 • கணினி பயிற்சி வகுப்புகள்.
 • ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
 • பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
 • ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
 • விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
 • தலைமைத்துவப் பயிற்சி.
 • தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
 • மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
 • மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
 • வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Diary). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).
மாதிரி வகுப்பறை (Model Classroom)

1. மாணவர்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.
2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.
3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.
5. கணினி.
6. தொலைக்காட்சி.
7. DVD Player.
8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.
9. கணித உபகரணங்கள்.
10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.
11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.
12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.
13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.
14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.
15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.
16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.
17. உயர் தர தள அமைப்பு.
18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.
19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.
20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி 

-

22 comments:

 1. வாழ்த்துக்கள் தலைமை ஆசிரியைக்கும்,பிராங்கிளின் அவர்களுக்கும் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் :-)))

  ReplyDelete
 2. அருமை. அருமை. இந்த பள்ளியை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. எப்போது எங்கள் ஊரில் இப்படி ஒரு பள்ளி வருமோ? வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்.

  ReplyDelete
 3. பிராங்கிளின் அவர்களுக்கும்,தலைமை ஆசிரியைக்கும் மற்றும் ஊக்கமளித்து உதவிய அனைத்து ஊர்மக்களுக்கும்.எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. sir really nice to see this the real fact of the government can do lot more than this but the some lofer government staff and some NGO can bribe the amount of government this is the role model and biggest achievement of Mr.Franklin. he is the living god in tamilnadu. i really proud about to u to publish this article. thank you sir and very kind of you to do this sir .the only reaction of mine is that tears from my eyes for development when it happen in tamil nadu. but sure we want to change it sir
  long live sir
  my best wishes

  ReplyDelete
 5. தலைமை ஆசிரியை,பிராங்கிளின் ,ஆசிரிய பெருமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களும் நன்றியும்

  ReplyDelete
 6. இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின் இருவருமே மிகச்சிறந்த வழிகாட்டிகளாய் வரலாறு படைத்துவிட்டார்கள்.

  பிரதிபலனென்று எதையுமே எதிர்பாராமல் உண்மையாய் செயலாற்றியிருக்கும் மேன்மக்கள் இவர்களை... நம் பாராட்டுக்கள் சீண்டவே சீண்டாது.

  கல்விக்கான நிதிகளிலும்கூட சன்மானத்தையே குறிவைத்து ஈனப்பிறவிகளாய்த்திரியும் அரசியல்வாதிகளை/அதிகாரிகளை/ஆசிரியர்களை அவரவர் பிள்ளைகளே காரித்துப்பித் திருத்துவார்கள்... வருங்காலத்தில். - கடலூர் ஜங்ஷன், கவுஸ்.

  ReplyDelete
 7. தனியார் பள்ளிதான்
  சிறந்த பள்ளி
  என்ற சிந்தனையை
  தூள் தூளாக்கிவிட்டார்கள்...

  ReplyDelete
 8. உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ...சரஸ்வதி அம்மா அவ்ர்களுக்க்ம் ஃப்ரான்ங்ளின் சார் அவ்ர்களுக்கும்....நீங்கள் எடுத்து வைத்தது மாற்றத்தின் முதல்படி..உங்கள் மாணவர்கள் உங்களை என்றும் மறக்க மாட்டார்கள்...

  ReplyDelete
 10. மனம் மிகவும் நிறைவைடைந்தது...
  நன்றி...வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 11. உங்கள் முயற்சி வீன்போகவில்லை.. உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன் ஃப்ரங்க்ளின் ...

  ReplyDelete
 12. I am very happy to see this, and also my hearty wishes to Mr.Franklin, Principal and the village people for this wonderful effort.

  ReplyDelete
 13. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.கற்றலில் சிறந்த கற்றல்,கற்பிப்பது எப்படி எனக் கற்பதே ஆகும்.என்பதை விட பன்மடங்கு மேலே சென்று விட்டீர்.உண்மையிலேயே நான் போற்றும் உன்னதமானவர்களில் தங்களுக்கும் சிறப்பிடம் உண்டு.தங்களது கல்விப்பணிக்கு எனது தலைதாழ்ந்த வணக்கங்கள் பல! என paramesdriver.blogspot.com நன்றி!

  ReplyDelete
 14. மரியாதைக்குரிய ஐயா,இது போன்ற சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு வான்மழை போன்ற எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் ஆர்வத்துடன் செயலாற்றும் ஆர்வம் வேண்டும்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.paramesdriver.blogspot.com

  ReplyDelete
 15. தனியார் பள்ளியின் தரத்திற்கு அரசுப் பள்ளியின் தரம் குறைந்ததல்ல என்று நிரூபித்துக்காட்டிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த ஒழுக்கத்தை கடைபிடிக்கும் மாணவர்களுக்கு நன்றி! உங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு அரசுப்பள்ளியும் இப்படி மாறும் நிலையை எதிநோக்கி நாம் உழைத்திட வேண்டும் என்பதே எனது கனவு! விரைவில் கனவு நினைவாகும் என்ற நம்பிக்கையுடன் கார்த்திகேயன் “நண்பா அறக்கட்டளை” புதுக்கோட்டை.

  ReplyDelete
 16. தனியார் பள்ளியின் தரத்திற்கு அரசுப் பள்ளியின் தரம் குறைந்ததல்ல என்று நிரூபித்துக்காட்டியுள்ளார்கள். தலைமை ஆசிரியைக்கும்,பிராங்கிளின் அவர்களுக்கும் மற்றும் ஊக்கமளித்து உதவிய அனைத்து ஊர்மக்களுக்கும்.எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. Wonderful effort. May God Bless all your efforts.

  ReplyDelete
 18. உங்களைப்போன்ற ஆசிரியர்கள் எல்லாப் பள்ளிகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்/வணங்குகிறோம். உங்கள் முயற்சிகளுக்கு நாங்களும் உங்களுடன் சிறுபங்கேற்க விழைகிறோம். தனி மின்னஞ்சலில் பின்னர் தொடர்புகொள்கிறோம்.

  ReplyDelete
 19. really nice to see a government school with so much facilities great

  ReplyDelete
 20. //ஆனால் இது போல இன்னொரு பள்ளியை உருவாக்க யாரும் முயற்சி செய்யவேயில்லை.//

  சோகம் தான். இந்த முயற்சிகள் தொடர, படர வேண்டும்.

  ReplyDelete
 21. //ஆனால் இது போல இன்னொரு பள்ளியை உருவாக்க யாரும் முயற்சி செய்யவேயில்லை

  ஏன் ?

  ReplyDelete

Note: only a member of this blog may post a comment.