Saturday, 1 October 2011

பள்ளி வரலாறு


சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டம் அது. மாதத்திற்கு ¼ அணா கொடுத்து மணலில் எழுதி கல்வி கற்றுவந்தனர் சிலர். இத்தகைய ஆர்வத்தினைக்கண்ட திரு.எம்.கே.கெம்பையகவுடர் (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்) அவர்களின் தந்தை திரு.கெம்பஜிகவுடர் அவர்களின் வழிகாட்டுதலால் திரு.ரங்கப்பகவுடர், திரு.திம்மையகவுடர், ஊர்கவுடர் திரு.திம்மப்பகவுடர் ஆகியோர்களின் பெருமுயற்சியால் 21.08.1930 ஆம் ஆண்டு திரு.ஆர்.வி.திம்மப்பகவுடர் அவர்களுடைய தோட்டத்தின் கீற்றுச்சாலையில் நலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல் ஆசிரியராக திரு.கோவனுார் பள்ளிகுண்ட ஐயர் அவர்கள் பணியாற்றியுள்ளார்.


படம் இணையத்திலிருந்து

அடுத்த சில ஆண்டுகளில் பொதுமக்களின் முயற்சியால் மண்சுவராலான கூரைப் பள்ளி ஒன்று சொந்தமாக உருவாக்கப்பட்டது. அன்றைய கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதியுடன் இந்த நலப்பள்ளியானது 30.01.1937 முதல் District Board Elementary school லாக தரமுயர்த்தப்பட்டது. அன்றைய அவிநாசி தாலுாக்காவிற்கு உட்பட்ட இராமம்பாளையம் பகுதியில் பள்ளிக்கூடம் என்ற அத்தியாயம் இவ்வாறாகத் தொடங்கியது. இங்கு கல்வியுடன்  சிலம்பாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் போன்ற Extra co-curricular activitiesகள் கற்றுத்தரப்பட்டுள்ளது.

நாளடைவில் இராமம்பாளையம் பகுதி மட்டுமல்லாமல் ஜடையம்பாளையம், தொட்டபாவி, தேரம்பாளையம், மாதனுார், பொன்முடி போன்ற பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது. இடப்பற்றாக்குறையால் தற்போது நூலகம் அமைந்துள்ள இடத்தில் ஊர் பொதுமக்களின் முயற்சியால் ஓட்டுக்கூரை வகுப்பறை ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு 1942 ம் ஆண்டு ஜில்லா போட்டு துணைத்தலைவர் கூகலுார் கே.கே.சுப்பண்ணகவுடர் மற்றும் எம்.கே. கெம்பையகவுடர் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் நுாற்றுக்கும் மேலான மாணாக்கர்கள் இங்கு கல்வி பயின்றுள்ளனர். ஆசிரியர்களின்  Dedication and Sacrifice ஆகியவற்றினால் மிகச்சிறப்பான பள்ளியாக இப்பள்ளி செயல்பட்டுள்ளது.

ஜடையம்பாளையம் (08.05.1949), தொட்டபாவி (31.12.1954) ஆகிய பகுதிகளில் புதிய பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதால் மாணாக்கர்களின் எண்ணிக்கை குறைந்தது.

1959 ஆம் ஆண்டு பகலுணவு மையம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 45 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்து வந்த வகுப்பறை கட்டடம் பழுதானதால் கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றித்தின் சார்பாக 1988 ஆம் ஆண்டில் புதிய இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

Thursday, 8 September 2011

எங்கள் பள்ளி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
பள்ளி பற்றிய தகவல்கள்:

 • அமைதியான கிராமச் சூழல்.
 • போதுமான கட்டட வசதி.
 • சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
 • கணினி பயிற்சி வகுப்புகள்.
 • ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
 • பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
 • ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
 • விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
 • தலைமைத்துவப் பயிற்சி.
 • தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
 • மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
 • மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
 • வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Diary). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).
மாதிரி வகுப்பறை (Model Classroom)

1. மாணவர்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.
2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.
3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.
5. கணினி.
6. தொலைக்காட்சி.
7. DVD Player.
8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.
9. கணித உபகரணங்கள்.
10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.
11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.
12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.
13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.
14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.
15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.
16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.
17. உயர் தர தள அமைப்பு.
18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.
19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.
20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி 

-