தேசிய
கட்சியின் மாநில செயலாளர் வருகை
கோயம்புத்துார் பாராளுமன்ற உறுப்பினர்
மதிப்பிற்குரிய திரு.பி.ஆர்.நடராசன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “மார்க்சிஸ்ட்
கம்யுானிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் உங்கள்
பள்ளியைப் பார்வையிட வருகை தருவதாகக் கூறியுள்ளார்” எனக்கூறினார்கள்.
சுமார் ஒருவாரகால இடைவெளியில் மதிப்பிற்குரிய
திரு.ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள் தொடர்பு கொண்டு பள்ளியின் இருப்பிடம் குறித்தத்
தகவல்களைக் கேட்டறிந்து, 20.03.2013 ஆம் நாள் பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள்.
திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களை வரவேற்கும் கிராமக்கல்விக் குழு தலைவர் திரு.மகேஷ். |
பள்ளி குறித்த விளக்கங்களை அறிந்து கொள்ளும் திரு.ஜி.ஆர் அவர்கள். |
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக பள்ளியில்
இருந்தவர், இறுதியாக இரண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மாணவி வி.வினிதாவுடன் உரையாடுகிறார். |
முதலாவதாது கருத்தை ஒரு சிறுகதையின் மூலம்
கூறினார்,
பொதுவாக இதுபோன்று ஏழ்மை நிலையில் உள்ள
குழந்தைகளே அரசு பள்ளிகளுக்கு வருகின்றனர். ஏழை மக்களின் தரம் உயர உங்களைப் போன்ற ஆசிரியர்களின்
பங்களிப்பே முக்கியமானதாக விளங்குகின்றன. அந்த வகையில் உங்கள் பணி தொடரட்டும்.
ஆசிரியர்களிடம் தனது கருத்தினைப் பகிர்ந்து கொள்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள். |
இரண்டாவது,
பொதுவாக பெரும்பாலானோர் பணியினை நேசித்துப்
பணியாற்றுகின்றனர். ஆனால், குடும்பத்தை முதன்மைப்படுத்தி அடுத்ததாகவே பணியினைக் கருதுவர்.
ஒரு சிலர் பணியினை முதன்மைப்படுத்தி, குடும்பத்தை அடுத்ததாகக் கருதுவர். உங்கள் பணி
இரண்டாவதைப் போன்றது, என்று கூறி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
திரு.ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுடன் குழந்தைகள். |
மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு
எம் பள்ளி, கிராமக்கல்விக்குழு மற்றும் இராமம்பாளையம் ஊர் பொது மக்கள் சார்பாக நெஞ்சம்
நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
தனது கருத்தைப் பதிவு செய்கிறார் திரு.ஜி.ஆர் அவர்கள். |
பதிவு : பிராங்கிளின்.