Tuesday, 1 January 2013

கல்வி அதிகாரிகளின் பார்வை

         கல்வி அதிகாரிகளின் பார்வை
 28.12.2012 ஆம் நாள் இரவு எங்கள் கோவை மாவட்டத்தின் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை காலை காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் உங்களது பள்ளிக்கு வருகைதர உள்ளார்கள். தயாராக இருங்கள் எனத் தெரிவித்தார்.
  
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. அதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் கல்வி அதிகாரிகள் வருகை புரிந்து மாணவர்களைப் பாராட்டினர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு.சாந்தி அவர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டபின், எங்கள் பள்ளிக்கு வருகைபுரிந்தார். இவருடன் எங்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு.து.கணேசமூர்த்தி அவர்களும் வருகை புரிந்திருந்தார்.

கோவையிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள நமது பள்ளிக்கு காலை 11 மணிக்கு வருகை புரிந்த கல்வி அதிகாரிகளை கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள், காரமடை ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சோ.குருசாமி மற்றும் தலைமையாசிரியை திருமதி.என்.சரஸ்வதி ஆகியோர் வரவேற்றனர்.

கோயம்புத்துார் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி அவர்களை வரவேற்கும் கிராமக்கல்விக்குழுவினர்.
தலைமையாசிரியை அவர்களைப்பாராட்டும் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள்.
 பள்ளியின் அருகில் வசிக்கும் சில மாணவர்கள் கணிப்பொறியில் கல்வி தொடர்பான குறுந்தகடுகளை இயக்கிக்கொண்டிருந்தனர்.அவர்களிடம் சென்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் சிறிது நேரம் உரையாடினார்.
         எங்கள் மாணவர்களிடம் உரையாடும் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.சாந்தி அவர்கள்.

 பின்னா் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.

கோவை மாட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.கருணாகரன் I.A.S அவர்கள் மூலம் வழங்கப்பட்ட நிதியில் மற்றொரு வகுப்பறையின் உள்கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. அவ்வகுப்பறையையும் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு, பின் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கணினி ஆய்வுக்கூடம், பள்ளியின் சுற்றுப்புறம், கழிப்பறை முதலானவற்றினையும் பார்வையிட்டனர்.
                                   

           எங்கள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆகாஷிடம் நுாலகப்புத்தகங்கள் தொடர்ந்து வாசிக்கிறீர்களா? என வினவினார். மாணவன் ஆகாஷ், தொடர்ந்து வாசிக்கிறோம் என்றான். அடுக்கிவைத்திருந்த புத்தகங்களைக்காட்டி இதில் நீ படித்த புத்தகம் என்ன? என்றார் கல்வி அதிகாரி.புத்தகங்களைப் பார்த்தவாறே “ பொம்மை குதிரை” புத்தகம் வாசித்தேன் என்றான் மாணவன். அதில் என்ன கதை இருந்தது எனக் கேட்ட அதிகாரியிடம், முழுக்கதையின் சுருக்கத்தைச் சொல்லி பாராட்டைப் பெற்றான் மாணவன்.

கிராம மக்களின் கூட்டு முயற்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு.சாந்தி அவர்களும், கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு.து.கணேசமூர்த்தி அவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துச் சென்றனர்.

நமது பள்ளியில் அசிம் பிரேம்ஜி 
கல்வி அறக்கட்டளையினர்




    ஹலோ… வணக்கம். நான் கிருத்திகா பேசுறேன். நீங்க இராமம்பாளையம் மாஸ்டருங்களா?
ஆமாங்க வணக்கம்.நீங்க யாருனு தெருஞ்சுக்கலாமா?

     நான் புதுடில்லியிலிருந்து பேசுறேன். Azim Premji Foundation-ல work பன்றேன். உங்கள் பள்ளி பற்றி website-ல் செய்தி பார்த்தோம். மிகச்சிறப்பா இருந்துது. உங்க பள்ளியைப்பார்க்க நாங்க நேரில்வர விரும்புகிறோம். டிசம்பர் 28 வரலாமா?
நீங்கள் எங்கள் பள்ளிக்கு வருவதில் மகிழ்ச்சி.ஆனால் தற்போது இரண்டாம் பருவ விடுமுறை என்பதால் எங்க குழந்தைகள் பள்ளிக்கு வரமாட்டார்கள்.
தட்ஸ் ஓகே. ஏதாவது கொஞ்சம் பேரையாவது நேரில்சந்திக்க ஆசை.முடிந்தால் பாருங்க.
ஓகே.பார்க்கிறோம்.28-ம் தேதி எப்போ வருவீங்க மேடம்.
சரியாக மதியம் 1 மணிக்கு School- க்கு வந்துருவோம்.
ஓகே நாங்கள் தயாராக இருக்கோம்.உங்க அழைப்பிற்கு ரொம்ப நன்றிங்க மேடம்.
நன்றிங்க சார்.பை.

28.12.2012.
இரண்டாம் பருவ விடுமுறையில் வெளியுார் செல்லாமல் பள்ளியின் அருகில் வசிக்கும் சில மாணவர்களிடம் தகவல் கூறிய போது, 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிட்டுகளாய் பறந்து வந்துவிட்டார்கள்.
(மாணவர்களின் வருகையைக் குறித்து நாங்கள் என்றும் கவலைப்பட்டதில்லை.ஏனெனில்,இவர்கள் எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பள்ளிவைக்க நீண்ட நாள்களாக நச்சரிப்பவர்கள்.)
பெங்களுரு Azim Premji Foundation- ல் பணியாற்றும் திரு.ராஜ் கிஷோர் மற்றும் செல்வி.கிருத்திகா ஆகியோர் மதியம் நமது பள்ளிக்கு வருகைபுரிந்தனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்டவுடன், முதலில் பள்ளிக் குழந்தைகளிடம் சென்று அவர்களிடம் பள்ளியின் நிலை குறித்தும், அவர்களின் ஆர்வம் குறித்தும் கேட்டறிந்தனர்.சிறுவர்களின் கதைகள், பாடல்கள் என நேரம் போய்க் கொண்டே இருந்தது.
திரு.ராஜ் கிஷோர் அவர்கள் குழந்தைகளுக்கு Magic கற்றுக் கொடுத்தார்.குழந்தைகள் அவரை விட்டபாடில்லை.மீண்டும் உங்களிடம் வருகிறோம் என்று கூறி, பள்ளி வளர்ச்சி குறித்த தகவல்களைக் கிராமக்கல்விக்குழுவினர் மற்றும் ஊர் பெரியவர்களிடம் பெற்றுப் பதிவு செய்தனர்.

 




 

 எங்கள் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் என்னிடமும் பள்ளியின் கடந்தகால நிகழ்வுகள் முதல் தற்போதைய நிலைவரை பல தகவல்களைக் கேட்டுப் பெற்றனர்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள், கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்புகள், கிராம மக்களின் ஆர்வத்துடனான பங்களிப்புகள், எங்களின் சிறிய முயற்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இப்பள்ளியின் வளர்ச்சிக்குக் காரணம் என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்தோம்.
Azim Premji Foundation மூலம் வெளியிடப்பட்டுள்ள கல்வி தொடர்பான பாடங்கள் அடங்கிய குறுந்தகடுகளை, நமது பள்ளிக் குழந்தைகளுக்கு கிருத்திகா அர்கள் வழங்கினார்.
நம் பள்ளிக் குழந்தைகளின் ஆர்வத்தின் காரணமாக, காகிதத்தில் பல்வேறு மாதிரிகளை (Craft work) திரு.ராஜ் கிஷோர் அவர்கள் கற்றுக் கொடுத்தார். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர்.
இறுதியில் இக்குழுவினர், நாங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறோம்.இதைப்போன்ற அரசு பள்ளியை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை.இதுவே முதல்முறை.நாங்கள் இப்பள்ளி குறித்து இணையத்தளத்தில் பார்த்த போது, சாதாரணமாகவே கருதினோம்.ஆனால், நேரில் பார்த்த போது நம்பவே முடியவில்லை.இந்த பணிகளை ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆச்சர்யம் அளிக்கிறது.குழந்தைகளின் ஆர்வம் எங்களை உற்சாகப்படுத்தியது.இது போன்ற பள்ளியில் படிக்க முடியவில்லை என்ற வருத்தமே ஏற்படுகிறது.இருந்தாலும் இக்கிராமத்துக் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.இன்றைய தினம் மிகமிக நல்ல சந்திப்பாக இருந்தது.வாழ்வின் நல்ல நாள்களில் இந்த நாளையும் ஒன்றாகக் கருதுகிறோம் என்றனர் நெகிழ்ச்சியுடன்.
மாலை 6.30 மணிக்கு இக்குழுவினரை அன்புடன் வழியனுப்பி வைத்தனர் இராமம்பாளையம் கிராமத்தினர்.
இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வருகைபுரிந்த Azim Premji Foundation குழுவினருக்கு நம் பள்ளி, கிராமக்கல்விக்குழு மற்றும் இராமம்பாளையம் பொதுமக்கள் சார்பாக அன்புகலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

Sunday, 29 April 2012

தங்கள் மனம் மலர்ந்தால் எம் மொட்டுகளும் மணம் வீசும்....

அன்புடையீர், வணக்கம்.
இராமம்பாளையம் பள்ளியிலிருந்து தங்களைத்தொடர்பு கொள்வதில் மகிழ்வடைகிறோம். தங்களின் வாழ்த்துக்களாலும், இயற்கையின் அருளாலும் மனநிறைவுடன் பணியாற்றி வருகிறோம்.

இராமம்பாளையம் பள்ளியின் வளர்ச்சி குறித்து அறிந்த பலரும் பள்ளிக்கு வருகை தந்து பாராட்டியும், பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக 2011-12 ஆம் கல்வியாண்டில் கோயம்புத்துார் மாவட்ட ஆட்சியர் திரு.எம்.கருணாகரன் அவர்கள், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள், கனடா நாட்டு வாட்டர்லுா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் அறிவர். செல்வக்குமார் அவர்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகள், எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை உலக நாடுகளில் வாழும் பல தமிழர்களுக்கு எடுத்துச்செல்ல காரணமாக இருந்தவர்களான புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்,  இணைய எழுத்தாளரும் நல்லாலோசகருமான ஈரோடு கதிர் அவர்கள், எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள், பல்வேறு இணைய, பத்திரிகை எழுத்தாளர்கள், கர்நாடக மாநிலத்தின் கல்வி அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் (சுமார் 90 பேர்), தமிழக்தின் பல பகுதிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் என பலரும் வருகை தந்த நிலையில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், இணையதள நண்பர்கள் என பலரும் தொடர்ந்து தொடர்பு கொண்டு  பாராட்டி வருவது இராமம்பாளையம் பகுதி கிராம மக்களை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறது.

அடுத்த கட்டமாக, எதிர்வரும் 2012-13 கல்வியாண்டில் மாணாக்கரின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் சில பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி,
1. நவீன கணினி வகுப்பறை ( Smart computer lab ) கட்டுதல்.
2. பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுதல் (125 மீட்டர் ).
3. மாணவர்களுக்கு உணவுக் கூடம் அமைத்தல்.
4. சமையலறையைப் புதுப்பித்தல்.
5. புதிதாக 11 கணிப்பொறிகள் மற்றும் LCD Projector வாங்குதல்.
6. விளையாட்டு மைதானம் அமைத்தல்.
7. விளையாட்டு தளவாடப்பொருள்கள் வாங்குதல்.
8. பொருள்கள் அறை (Store room) அமைத்தல்.
9.பள்ளி வளாகத்தில் அழகிய தோட்டம் மற்றும் கருத்துப்படங்களைச் சுற்றுச் சுவர்களில் வரைதல்.
     10.புதிய தளவாடப் பொருட்கள் வாங்குதல்.

புதிய கணினி வகுப்பறை கட்டடப் பணி


சுற்றுச்சுவர்- வடக்குப்பகுதி

சுற்றுச்சுவர்- மேற்கு பகுதி
சுற்றுச்சுவர்- தெற்கு பகுதி

                 இப்பணிகளை வரும் கல்வியாண்டின் துவக்கத்திற்குள் விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணிகளுக்கானத் திட்டத் தொகை ரூபாய் 14 இலட்சம் ஆகும். இதில் தமிழக அரசின் மூலம் 8.08 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்ட பணிகளை நிறைவு செய்ய இன்னும் சுமார் 6 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

          இந்நிலையில் தங்களிடம் ஆலோசனைகளையும், உதவிகளையும் கோர விரும்புகின்றோம். எங்களின் ஆக்கப்பூர்வமான பணிக்குத் தாங்கள் தோள் கொடுத்து உதவினால் பேருதவியாக அமையும்.

தாங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதோடு மிக நேர்த்தியாக, தொலைநோக்குப் பார்வையுடன் பயன்படுத்தப்படும்.

முகம் மலரும் அன்பர்களுக்காகக் காத்திருக்கிறோம்.

"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
             கொள்வர் பயன்தெரி வார்."
Canara Bank Swift code    : CNRBINBBOXC ( வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ) 
 Canara Bank IFSC Code  : CNRB0001031 ( இந்தியாவில் வாழ்பவர்கள் )                    வங்கிக் கணக்கு எண்  : 1031101123120 
கணக்கு பெயர்     : PTA, PANCHAYAT UNION PRIMARY SCHOOL, RAMAMPALAYAM. 
வங்கி / கிளை     :  CANARA BANK / SIRUMUGAI Branch

பள்ளி முகவரி     :    THE HEADMISTRESS, 
PANCHAYAT UNION PRIMARY SCHOOL, 
RAMAMPALAYAM, JADAYAMPALAYAM-POST,
SIRUMUGAI- 641302. METTUPALAYAM.

தொடர்பு எண்கள் : ந.சரஸ்வதி         99521 64582
                   து.பிராங்கிளின்      99424 72672

                              " காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
                                ஞாலத்தின் மாணப் பெரிது."
- நன்றியுடன்,
 பிராங்கிளின்.
     01.04.2012 ஆம் நாள், கோயம்புத்துார் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள்  நமது பள்ளிக்கு வருகைதந்து மாணவர்கள் மற்றும் பள்ளி செயல்பாடுகளை அறிந்து மனம்மகிழ்ந்து பாராட்டிச்சென்றனர்.


 கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள் , சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள் மற்றும் கோவை தொழிலதிபர் திரு.ஜெயசந்திரன் அவர்கள்.

எங்கள் பள்ளிக்கு வருகைதந்த இக்குழுவினருக்கு எம்பள்ளி மற்றும் இராமம்பாளையம் கிராம மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த 
நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

Sunday, 5 February 2012

கோயம்புத்துார் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.கருணாகரன் அவர்கள் வருகையின் போது மாணவர்கள் அவருடன் உரையாடியபோது,


 தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எங்களது பள்ளிக்கு வருகைதந்து, குழந்தைகளின் ஆற்றல்களை அக்கறையோடு அறிந்தார்.







Saturday, 1 October 2011

பள்ளி வரலாறு


சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டம் அது. மாதத்திற்கு ¼ அணா கொடுத்து மணலில் எழுதி கல்வி கற்றுவந்தனர் சிலர். இத்தகைய ஆர்வத்தினைக்கண்ட திரு.எம்.கே.கெம்பையகவுடர் (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்) அவர்களின் தந்தை திரு.கெம்பஜிகவுடர் அவர்களின் வழிகாட்டுதலால் திரு.ரங்கப்பகவுடர், திரு.திம்மையகவுடர், ஊர்கவுடர் திரு.திம்மப்பகவுடர் ஆகியோர்களின் பெருமுயற்சியால் 21.08.1930 ஆம் ஆண்டு திரு.ஆர்.வி.திம்மப்பகவுடர் அவர்களுடைய தோட்டத்தின் கீற்றுச்சாலையில் நலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல் ஆசிரியராக திரு.கோவனுார் பள்ளிகுண்ட ஐயர் அவர்கள் பணியாற்றியுள்ளார்.


படம் இணையத்திலிருந்து

அடுத்த சில ஆண்டுகளில் பொதுமக்களின் முயற்சியால் மண்சுவராலான கூரைப் பள்ளி ஒன்று சொந்தமாக உருவாக்கப்பட்டது. அன்றைய கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதியுடன் இந்த நலப்பள்ளியானது 30.01.1937 முதல் District Board Elementary school லாக தரமுயர்த்தப்பட்டது. அன்றைய அவிநாசி தாலுாக்காவிற்கு உட்பட்ட இராமம்பாளையம் பகுதியில் பள்ளிக்கூடம் என்ற அத்தியாயம் இவ்வாறாகத் தொடங்கியது. இங்கு கல்வியுடன்  சிலம்பாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் போன்ற Extra co-curricular activitiesகள் கற்றுத்தரப்பட்டுள்ளது.

நாளடைவில் இராமம்பாளையம் பகுதி மட்டுமல்லாமல் ஜடையம்பாளையம், தொட்டபாவி, தேரம்பாளையம், மாதனுார், பொன்முடி போன்ற பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது. இடப்பற்றாக்குறையால் தற்போது நூலகம் அமைந்துள்ள இடத்தில் ஊர் பொதுமக்களின் முயற்சியால் ஓட்டுக்கூரை வகுப்பறை ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு 1942 ம் ஆண்டு ஜில்லா போட்டு துணைத்தலைவர் கூகலுார் கே.கே.சுப்பண்ணகவுடர் மற்றும் எம்.கே. கெம்பையகவுடர் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் நுாற்றுக்கும் மேலான மாணாக்கர்கள் இங்கு கல்வி பயின்றுள்ளனர். ஆசிரியர்களின்  Dedication and Sacrifice ஆகியவற்றினால் மிகச்சிறப்பான பள்ளியாக இப்பள்ளி செயல்பட்டுள்ளது.

ஜடையம்பாளையம் (08.05.1949), தொட்டபாவி (31.12.1954) ஆகிய பகுதிகளில் புதிய பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதால் மாணாக்கர்களின் எண்ணிக்கை குறைந்தது.

1959 ஆம் ஆண்டு பகலுணவு மையம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 45 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்து வந்த வகுப்பறை கட்டடம் பழுதானதால் கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றித்தின் சார்பாக 1988 ஆம் ஆண்டில் புதிய இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

Thursday, 8 September 2011

எங்கள் பள்ளி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.




பள்ளி பற்றிய தகவல்கள்:

  • அமைதியான கிராமச் சூழல்.
  • போதுமான கட்டட வசதி.
  • சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
  • கணினி பயிற்சி வகுப்புகள்.
  • ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
  • பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
  • ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
  • விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
  • தலைமைத்துவப் பயிற்சி.
  • தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
  • மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
  • மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
  • வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Diary). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).












மாதிரி வகுப்பறை (Model Classroom)

1. மாணவர்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.
2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.
3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.
5. கணினி.
6. தொலைக்காட்சி.
7. DVD Player.
8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.
9. கணித உபகரணங்கள்.
10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.
11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.
12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.
13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.
14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.
15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.
16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.
17. உயர் தர தள அமைப்பு.
18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.
19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.
20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி 

-